ADDED : ஜூன் 13, 2025 01:31 AM
திருப்பூர், திருப்பூரில் அரசு பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் அத்துமீறிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரை சேர்ந்தவர், 19 வயது இளம்பெண். அரசு ஐ.டி.ஐ.,யில் படித்து வருகிறார். நேற்று கல்லுாரி முடிந்து, அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது, பஸ்சில் பயணம் செய்த, ஒருவர், மாணவியிடம் அத்துமீறினார். உடனே மாணவி கூச்சலிட்டார்.
அவரை பிடித்து திருப்பூர் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருப்பூர் கே.வி.ஆர்., நகரை சேர்ந்த சுரேஷ், 38 என்பது தெரிந்தது. மதுபோதையில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.