ADDED : ஜூன் 13, 2025 01:32 AM
ஈரோடு, ஈரோடு, பெருந்துறை சாலையில் பாரதியார் பல்கலை, முதுநிலை மேற்படிப்பு விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இம்மையத்தை பல்கலை நிர்வாகம் மூடும் முடிவுக்கு வந்ததுடன், நடப்பாண்டுக்கு சேர்க்கை அறிவிக்கவில்லை. இதை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், சேர்க்கைக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இகுருறித்து பாரதியார் பல்கலை பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ஈரோட்டில் செயல்படும் ஆராய்ச்சி மையத்தில், 2025-26ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவுகளான எம்.ஏ., தமிழ், - ஆங்கிலம், எம்.எஸ்.சி., கணிதம், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்.சி., கணினி அறிவியல் சேர்க்கைக்கு, https://bu.ac.in/294/pgcentreadmission என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இதர சான்றுகள் இணைத்து, 'இயக்குனர் (பொறுப்பு), பாரதியார் பல்கலை கழக முதுகலை பட்ட மேற்படிப்பு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோடு' என்ற முகவரிக்கு ஜூலை, 31க்குள் அனுப்ப வேண்டும்.