துணை தேர்வுகளுக்கு 4 மையங்கள் அமைப்பு
துணை தேர்வுகளுக்கு 4 மையங்கள் அமைப்பு
துணை தேர்வுகளுக்கு 4 மையங்கள் அமைப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:05 AM
ஈரோடு: தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வராதவர்களுக்கு துணை தேர்வு நடக்கிறது.
பிளஸ் 2க்கு வரும், 24 முதல் ஜூலை 1 வரை; பிளஸ் 1க்கு ஜூலை 2 முதல் ஜூலை 9 வரை; 10ம் வகுப்புக்கு ஜூலை 2 முதல் ஜூலை 8 வரை துணைத்தேர்வு நடக்கவுள்ளது.இத்தேர்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தி என 4 தேர்வு மையம் அமைக்கப்பட்டு, நடத்துவதற்கான ஆயத்தப்பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்தான், தேர்வு எழுதுவோர் இறுதி நிலவரம் தெரிய வரும் என, பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.