/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் குடிநீர் கேட்டு சாலை மறியல் ஈரோட்டில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
ஈரோட்டில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
ஈரோட்டில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
ஈரோட்டில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
ADDED : ஜூன் 06, 2024 10:26 PM
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டேட் வங்கி ரோடு அருகே, ஓடைப்பள்ளம் பகுதியில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. இதனால் அவதிக்கு ஆளான மக்கள், காலி குடங்களுடன் காந்திஜி சாலையில், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகவடிவு, மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார், மக்களிடம் பேசினர்.
இதுகுறித்து மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் கூறும்போது,''மின் மோட்டார் பழுதால் சீரான குடிநீர் வழங்க முடியாமல் உள்ளது. பழுதை சரிசெய்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது கழிப்பிடம் குறித்த கோரிக்கையை, உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இதையேற்று மக்கள் மறியலை கைவிட்டனர். சிறிது நேரத்தில் அப்பகுதி மக்களுக்கு, மாநகராட்சி சார்பில் டிராக்டரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.