வரட்டுப்பள்ளத்தில் 11.40 மி.மீ., மழை
வரட்டுப்பள்ளத்தில் 11.40 மி.மீ., மழை
வரட்டுப்பள்ளத்தில் 11.40 மி.மீ., மழை
ADDED : ஜூன் 07, 2024 12:09 AM
ஈரோடு: வரட்டுப்பள்ளத்தில் அதிகபட்சமாக, 11.40 மி.மீ., மழை பெய்தது.
தென்மேற்கு பருவமழை துவங்கியதாக அறிவித்தாலும், ஈரோடு மாவட்டத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. கனமழை எச்சரிக்கைக்கு உள்ளான மாவட்டத்தில், ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பதிவானது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளத்தில், ௧௧.௪௦ மி.மீ., மழை பெய்தது. தாளவாடியில், 1.50 மி.மீ., பெய்தது. பிற இடங்களில் மழை பொழிவு இல்லை. தாளவாடியில் மழைக்கு ஒரு வீடு சேதமானது.