/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரேஷன் அரிசி கடத்தலில் 5 மாதத்தில் 156 பேர் கைதுரேஷன் அரிசி கடத்தலில் 5 மாதத்தில் 156 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தலில் 5 மாதத்தில் 156 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தலில் 5 மாதத்தில் 156 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தலில் 5 மாதத்தில் 156 பேர் கைது
ADDED : ஜூன் 03, 2024 07:02 AM
ஈரோடு : குடிமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில், ரேஷன் அரிசி கடத்தல், பதுக்குதல் மற்றும் கள்ள சந்தையில் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது, 135 வழக்குகள் பதிவு செய்து, 32,300 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றியுள்ளனர்.
இதில், 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 52 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட, 88 வாகனங்களுக்கு, 17 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் அரசு மானிய விலையில் வீட்டு உபயோகத்துக்கு வழங்கிய காஸ் சிலிண்டர்களை வியாபாரத்துக்கு பயன்படுத்திய, 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.