/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வெண்டிபாளையம் பேரேஜ் பகுதியில் காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைவெண்டிபாளையம் பேரேஜ் பகுதியில் காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
வெண்டிபாளையம் பேரேஜ் பகுதியில் காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
வெண்டிபாளையம் பேரேஜ் பகுதியில் காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
வெண்டிபாளையம் பேரேஜ் பகுதியில் காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
ADDED : ஜூன் 03, 2024 07:02 AM
ஈரோடு : ஈரோடு மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு, பவானி ஆறு உள்ளது. இதில் காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் தண்ணீர் குறைந்து, பாறைகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் வெண்டிபாளையம் தடுப்பணை பகுதி காவிரி ஆற்றில், தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. இந்த செடிகள் நீரை விரைவாக உறிஞ்சி ஆவியாக்கி விடும்.
மேலும் நெகிழி புட்டி, குப்பை, மீன் கழிவு தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றில் ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: வெண்டிபாளையம் தடுப்பணை பகுதி காவிரி ஆற்றில், 25 ஏக்கர் பரப்பளவுக்கு ஆகாய தாமரை செடிகள் ஆற்று நீரை சூழ்ந்துள்ளது. இதனால் மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மீன்களுக்கு போதிய காற்று கிடைக்காமல், மீன்வளம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.