/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாலிபர் கொலையால் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்புவாலிபர் கொலையால் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு
வாலிபர் கொலையால் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு
வாலிபர் கொலையால் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு
வாலிபர் கொலையால் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜூன் 03, 2024 07:02 AM
ஈரோடு : வாலிபர் கொலையில் எஸ்.பி.,யிடம் அளிக்கப்பட்ட புகார் மனு எதிரொலியாக, முனியப்பன் பாளையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாசூர், முனியப்பன் பாளையத்தை சேர்ந்தவர் ஹரீஷ், 21; கோவில் பிரச்னை, பெண் விவகாரம் தொடர்பான முன் விரோதத்தில், கடந்த, 26ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பிளம்பர் வெள்ளியங்கிரி, 36, என்பவரால், கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். கொடுமுடி குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி, 27ம் தேதி சரணடைந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட சிவானந்தன், பூசாரி கனகராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.அதேசமயம் கொலையில் தேடப்பட்டு வந்த செங்கோட்டையன், 62, என்பவரும் கொடுமுடி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் ஹரீஷின் தாயார் இளையம்மாள், ஈரோடுஎஸ்.பி., ஜவகரிடம் கடந்த, 31ல் மனு அளித்தார். அதில், கொலை செய்தவர், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களின் உறவினர்கள் புகாரை வாபஸ் பெற மிரட்டுகின்றனர்.உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டிருந்தார். இதையடுத்து, 31ம் தேதி முதல் முனியப்பன்பாளையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரும் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டுள்ளனர்.பாதுகாப்பு மேலும் சில தினங்களுக்கு தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.