தொடர் தாமதம் ஏன்? கலெக்டர் விளக்கம்
தொடர் தாமதம் ஏன்? கலெக்டர் விளக்கம்
தொடர் தாமதம் ஏன்? கலெக்டர் விளக்கம்
ADDED : ஜூன் 05, 2024 05:09 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையில், ஒவ்வொரு சுற்றும் இறுதி செய்து வெளியிட தொடர் தாமதம் ஏற்பட்டது. காலை, 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எண்ணப்பட்டாலும், செய்தியாளர்களுக்கு முதல் சுற்று - 10:40 மணிக்கும், 2ம் சுற்று - 12.22க்கும், 3ம் சுற்று - 1.11க்கும், 4ம் சுற்று, 1:32க்கும், 5ம் சுற்று - 4:28 க்கும் வழங்கப்பட்டது.
இதுபற்றி கலெக்டர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து முறையிட்ட நிலையில், அவர் கூறியதாவது:
பல தொகுதியில் ஒரு இ.வி.எம்., இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மேலும் வேட்பாளர் எண்ணிக்கையும் குறைவு. ஆனால், ஈரோடு தொகுதியில், 31 வேட்பாளர்களால், இரண்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பதிவையும் முகவர்களிடம் காண்பித்து, அறிவிப்பு செய்து, பதிவு செய்து, அடுத்த வேட்பாளர் பெற்ற ஓட்டை பார்க்க, 8 முதல், 15 வினாடிகளுக்கு மேலாகிறது. முன்னதாக முகவர்கள், பிற அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். தாராபுரம் தொகுதிக்கான ஒரு இயந்திரத்தில் லாக் உடைந்திருந்தது. அதை முகவர்களிடம் காண்பித்து, 'வாகனங்களில் கொண்டு வரும் வழியில் உடைந்திருக்கும்' என அவர்களிடம் ஒப்புதல் பெற்று எண்ணப்பட்டது. மற்றொரு இயந்திரம் 'எரர்' என வந்ததால், தேர்தல் ஆணைய விதிப்படி சரி செய்ய முயன்று, முடியாததால் தனியாக வைத்துள்ளோம். அதுபோல தாராபுரம் தொகுதி எண்ணிக்கையில் சில பிரச்னைகள் முடியும் முன், மற்ற ஐந்து தொகுதிகள் அடுத்தடுத்த சுற்றுக்கு சென்று விட்டன. ஈரோட்டில் மட்டுமில்ல. பிற தொகுதிகளிலும் இதேபோன்ற பிரச்னைகள் எழுந்து தாமதமாகியுள்ளது. இவ்வாறு கூறினார்.