ADDED : ஜூன் 05, 2024 05:09 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான தபால் ஓட்டுக்கள், 7,960ல், 779 ஓட்டுகள் செல்லாதவையாகும்.
ஈரோடு லோக்சபா தொகுதியில், 7,960 ஓட்டுகள் பதிவானது. அதில், அ.தி.மு.க., ஆற்றல் அசோக்குமார் - 2,022, பகுஜன் சமாஜ் கட்சி ஈஸ்வரன் - 62, தி.மு.க., கே.இ.பிரகாஷ்-3,490, நாம் தமிழர் கட்சி கார்மேகன்-464, த.மா.கா., விஜயகுமார்-592 ஓட்டுகள் பெற்றுள்ளனர். தவிர பிற கட்சியினர், சுயேட்சைகள் இரு இலக்கங்களுக்குள் ஓட்டை பெற்றுள்ளனர். இதில் நோட்டோ-241, செல்லாதவை-779 ஆகும். உரிய ஆவணங்கள், சான்றுகளின்றி பெறப்பட்டு தள்ளுபடியான ஓட்டுகள்-164 ஆகும்.