Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கருங்கல்பாளையத்தில் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கருங்கல்பாளையத்தில் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கருங்கல்பாளையத்தில் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கருங்கல்பாளையத்தில் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ADDED : ஜூலை 29, 2024 01:25 AM


Google News
ஈரோடு: குறுவை சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு, மேட்டூர் அணையில் இருந்து, 12 ஆயிரம் கன அடி நீர் நேற்று திறக்கப்பட்-டது. அதேசமயம் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்ப-டலாம் என்பதால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு, நேற்று எச்சரிக்கை விடப்பட்டது.

இதன்படி நேற்று காலை ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில், இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். இதேபோல் மாநக-ராட்சி சார்பிலும் ஒலிபெருக்கிகள் மூலமாக காவிரி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, நிலைமையை சமாளிப்பது குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று நடந்தது.

கரையோர பகுதி மக்கள் நீரில் இறங்கி குளிக்க, நீச்சல் அடிக்க, மீன் பிடிக்க, கால்நடைகளை குளிப்பாட்ட,போட்டோ எடுப்-பதை முற்றிலும் தவிர்க்க வேண்டுகோள் விடப்பட்டது. இதை தொடர்ந்து ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள், கருங்கல்பாளையம் காவிரி கரைக்கு சென்று ஆய்வு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us