2 வாலிபர்கள் மீது போக்சோவில் வழக்கு
2 வாலிபர்கள் மீது போக்சோவில் வழக்கு
2 வாலிபர்கள் மீது போக்சோவில் வழக்கு
ADDED : ஜூலை 29, 2024 01:23 AM
ஈரோடு: ஈரோடு, 46 புதுார், மாயவன் கோவில் வீதி பச்சபாளியை சேர்ந்த கட்டட மேஸ்திரி வெங்கடாசலம், 22; சேலத்தை சேர்ந்த ,16 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை காட்டி கடத்தி சென்று திருமணம் செய்தார்.
சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளார். சைல்ட் ஹெல்ப் லைன் அலுவலர் புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்ட பிரிவு மற்றும் போக்சோவில், வெங்கடாசலம் மீது வழக்குப்ப-திவு செய்துள்ளனர். இதேபோல் வெள்ளோடு, தொட்டிபா-ளையம். சக்தி நகரை சேர்ந்த கட்டட மேஸ்திரி கோபால கிருஷ்ணன், 24; ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை திரு-மணம் செய்து கர்ப்பமாகிக்கிய வழக்கில், அவர் மீதும் இரு பிரி-வுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.