/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தவர் சாவு மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தவர் சாவு
மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தவர் சாவு
மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தவர் சாவு
மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தவர் சாவு
ADDED : ஜூன் 28, 2024 01:05 AM
பெருந்துறை, பவானியை அடுத்த சன்னியாசிபட்டி, மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் வினோத், 28; திருமணமாகி இரு குழந்தை உள்ளது. கட்டட கம்பி கட்டும் கூலி தொழிலாளி. பெருந்துறையை அடுத்த பிச்சாண்டம்பாளையத்தில், கடந்த, 19ம் தேதி ஒரு வீட்டில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மின் கம்பியில் கம்பி பட்டு, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.