/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பயன்பாட்டுக்கு வராமல் 'உறங்கும்' 2,864 'டேப்' பயன்பாட்டுக்கு வராமல் 'உறங்கும்' 2,864 'டேப்'
பயன்பாட்டுக்கு வராமல் 'உறங்கும்' 2,864 'டேப்'
பயன்பாட்டுக்கு வராமல் 'உறங்கும்' 2,864 'டேப்'
பயன்பாட்டுக்கு வராமல் 'உறங்கும்' 2,864 'டேப்'
ADDED : ஜூன் 28, 2024 01:05 AM
ஈரோடு, தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி ஈரோடு, கோபி கல்வி மாவட்டத்துக்கு, 2,864 கையடக்க கணினி கடந்த ஏப்ரல் மாதம்
வந்தது.
இதற்காக பள்ளிகளில் வை-பை வசதியும் ஏற்படுத்தபட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதியால் டேப்களை வழங்க முடியவில்லை. தற்போது நடத்தை விதி முடிந்தும், பயன்பாடின்றி அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கு வழங்கப்படுமா என்று ஆசிரியர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.