ADDED : ஜூலை 20, 2024 07:14 AM
பவானி : நெருஞ்சிப்பேட்டை, கொடம்பக்காட்டை சேர்ந்தவர் முனு-சாமி, 42; பாலமலை அடிவாரத்தில் இவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் உள்ளது.
தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க, நாய் வளர்த்து வந்தார். நேற்று காலை மர்ம விலங்கு கடித்ததில் நாய் இறந்து கிடந்தது. தகவலின்படி சென்ற சென்னம்பட்டி வனத்துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் மர்ம விலங்கின் கால் தடத்தை பதிவு செய்து விசாரித்து வருகின்-றனர். இதேபோல் குருவரெட்டியூர் அருகே பாலமலை அடி-வாரம், விளாமரத்துக்காடு காடு பகுதியில், இருசப்பன் என்ப-ருக்கு சொந்தமான நாயையும், மர்ம விலங்கு கடித்துள்ளது.