/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு
கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு
கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு
கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு
ADDED : ஜூலை 20, 2024 07:15 AM
ஈரோடு : ஈரோடு, மேல்மலையம்பாளையம், கருப்பணார் கோவில் பகு-தியை சேர்ந்தவர் சிவசங்கர், 32; ஆட்டோ டிரைவர். ஈரோட்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரின் மனைவி தமிழ்செல்வி, 24; தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தமிழ்செல்வி, சேனாதிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தனிமையில் இருந்த சிவ-சங்கர் கடந்த, 18ம் தேதி இரவு, கருப்பணார் கோவில் அருகே கிணற்று சுவர் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது தவறு-தலாக கிணற்றுக்குள் விழுந்ததில் இறந்து விட்டார். தீயணைப்பு நிலைய வீரர்கள் சிவசங்கரின் உடலை மீட்டனர்.