/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் பங்களாப்புதுாரில் ௪ பேர் கைது அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் பங்களாப்புதுாரில் ௪ பேர் கைது
அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் பங்களாப்புதுாரில் ௪ பேர் கைது
அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் பங்களாப்புதுாரில் ௪ பேர் கைது
அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் பங்களாப்புதுாரில் ௪ பேர் கைது
ADDED : ஜூலை 20, 2024 07:14 AM
டி.என்.பாளையம் : பங்களாப்புதுார் அருகே புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி பிள்ளையார் கோவில் வீதியில், புறம்போக்கு இடத்தை ஆக்கிர-மித்து ஏழு பேர் வசிக்கின்றனர்.
இந்த இடத்தை மீட்பது தொடர்பாக, சட்ட நடவடிக்கை அறி-விப்பு நோட்டீஸ் வழங்க, கோபி மண்டல துணை தாசில்தார் இலக்கியசெல்வம் தலைமையில், வாணிப்புத்துார் நில வருவாய் ஆய்வாளர் சக்திவேல், புஞ்சை துறையம்பாளையம் அ கிராம வி.ஏ.ஓ., நடராஜ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சென்றனர். பழனியப்பன் மனைவி சரசாள், நோட்டீசை பெற்றுக்கொள்ள முன் வந்தார்.
ஆனால், பங்களாப்புதுார், அண்ணா நகரை சேர்ந்த மதன்-குமார், ரவி, நாகராஜ், அசோக் உள்ளிட்டோர், அரசு அலுவலர்க-ளிடம் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தை பேசியுள்ளனர். நோட்டீஸ் வழங்க விடாமல் தடுத்து, கொலை மிரட்டலும் விடுத்-தனர். இதுகுறித்து பங்களாப்புதுார் போலீசில், அரசு அலுவ-லர்கள் தரப்பில் புகார் தரப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்-குப்பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர். கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக பவுனாள் என்பவரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.