/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொடர் வன குற்றத்தில் ஈடுபட்ட ஆசாமி குண்டாசில் கைது தொடர் வன குற்றத்தில் ஈடுபட்ட ஆசாமி குண்டாசில் கைது
தொடர் வன குற்றத்தில் ஈடுபட்ட ஆசாமி குண்டாசில் கைது
தொடர் வன குற்றத்தில் ஈடுபட்ட ஆசாமி குண்டாசில் கைது
தொடர் வன குற்றத்தில் ஈடுபட்ட ஆசாமி குண்டாசில் கைது
ADDED : ஜூலை 30, 2024 03:28 AM
சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம், எத்தேகவுடன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மன், 53; கடந்த, 2001 முதல் ஆசனுார், சத்தி வனக்கோட்ட காப்புக்காடு பகுதியில், யானைகளை வேட்டையாடி தந்தங்களை கடத்துதல் போன்ற வன உயிரின குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஏப்., 23ம் தேதி தாளவாடி வனச்சரகம் கும்டாபுரம் பகுதியில், ஆண் யானையை வேட்டையாடி தந்தங்களை கடத்திய சம்பவத்தில், சத்தி கிளைச் சிறையிலும் அதை தொடர்ந்து மாவட்ட சிறையிலும் அடைக்கப்-பட்டார். இவர் மீது ஏழு வன உயிரினங்கள் குற்ற வழக்குகள், ஆசனுார் மற்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ளன. மேலும் பல்வேறு வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைம-றைவாக இருந்துள்ளார். இப்படி தொடர்ச்சியாக வன உயிரின குற்றங்களில் ஈடுபட்டதால், ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்திர-வின்படி, பொம்மன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதைய-டுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.