/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மலை கிராம பள்ளியில்ஆசிரியர் இல்லாததால்மாணவர்கள் கவலை மலை கிராம பள்ளியில்ஆசிரியர் இல்லாததால்மாணவர்கள் கவலை
மலை கிராம பள்ளியில்ஆசிரியர் இல்லாததால்மாணவர்கள் கவலை
மலை கிராம பள்ளியில்ஆசிரியர் இல்லாததால்மாணவர்கள் கவலை
மலை கிராம பள்ளியில்ஆசிரியர் இல்லாததால்மாணவர்கள் கவலை
ADDED : ஜூன் 24, 2024 03:04 AM
அந்தியூர்:பர்கூர்மலையில் உள்ள கிழக்குமலை, தேவர்மலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நடப்பாண்டில் கலைப்பிரிவை புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். ஆனால் இந்தப் பிரிவுக்கான எந்த பாடத்துக்கும் ஆசிரியர்கள் இல்லை. இதனால் ஆசை, ஆசையாக சேர்ந்த மாணவர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட டி.இ.ஒ., மோகன் கூறியதாவது: போஸ்ட்டிங் இல்லாமல் குரூப்பை ஆரம்பித்து விட்டார்கள், ஹிஸ்டரி பாடத்துக்கு மட்டுமே ஆசிரியர் உள்ளார். அக்கவுன்டன்ஸி, காமர்ஸ் பிரிவுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து கலெக்டருக்கு அறிக்கை தந்துள்ளோம். இவ்வாறு கூறினார்.