/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானி அருகே ஓடையில் ஓடிய சாயக்கழிவு நீர் பவானி அருகே ஓடையில் ஓடிய சாயக்கழிவு நீர்
பவானி அருகே ஓடையில் ஓடிய சாயக்கழிவு நீர்
பவானி அருகே ஓடையில் ஓடிய சாயக்கழிவு நீர்
பவானி அருகே ஓடையில் ஓடிய சாயக்கழிவு நீர்
ADDED : ஜூன் 24, 2024 03:03 AM
பவானி;பவானியை அடுத்த சேர்வராயன்பாளையம், செங்காடு, காடையாம்பட்டி பகுதிகளில் சாயப்பட்டறைகள் அதிகம் இயங்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால், சுத்திகரிப்பு நிலையம் இல்லாத, 30க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. சாயக் கழிவுகளை வெளியேற்றிய சட்ட விரோத சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன. இந்நிலையில் சேர்வராயன்பாளையம், மாரியம்மன் கோயில் அருகே கழிவு நீர் ஓடையில் சிவப்பு மற்றும் நீல நிறத்தில், நேற்று பகலில் சாயக்கழிவு நீர் ஓடியதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கழிவு நீர் ஓடையில் சாயப்பட்டறைகள் திறந்துவிடும் சாயக்கழிவு நீர், பவானி ஆற்றில் நேரடியாக கலக்கிறது. இந்த நீர், காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனத்துக்கு திறக்கப்படும்போது, விவசாய நிலங்களுக்குச் சென்று, ரசாயன கலப்பால் நிலங்கள் மாசடைகின்றன. ஏற்கனவே, பவானி ஆற்றின் கரையோர குடியிருப்பு கழிவு கலந்து மாசு ஏற்படும் நிலையில், சாயக்கழிவு நீரும் கலப்பது வேதனையாக உள்ளது. சாயப்பட்டறைகள் அதிகம் உள்ள காடையம்பட்டி, செங்காடு மற்றும் சேர்வராயன்பாளையம் பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, சாயக்கழிவுகள் வெளியேறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.