ADDED : ஜூன் 24, 2024 03:02 AM
கோபி;பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர்.
வார விடுமுறை என்றாலும், வானம் மேக மூட்டமாக இருந்ததால், நேற்று குறைந்த சுற்றுலா பயணிகளே வந்தனர். இதனால் அருவி பக்கமும், பரிசல் துறையும் வெறிச்சோடி காணப்பட்டது.