ADDED : ஜூன் 08, 2024 02:23 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, நெய்தலுார் பஞ்., பெரிய பனையூர் காமாட்சி அம்மன் கோவில் ஆற்றுவாரியில், மணல் கடத்துவதாக வந்த தகவல்படி, வி.ஏ.ஓ., அண்ணாதுரை நேற்று முன்தினம் காலை சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர் டிப்பரை மறித்து சோதனை செய்தனர். அதில் ஒரு யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது. வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஓடிவிட்டார். மேலும் உரிய ஆவணம் இல்லாமல் மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல் செய்யப்பட்டு, குளித்தலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.