/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மஞ்சப்பை இயந்திரம் வழங்கல்சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மஞ்சப்பை இயந்திரம் வழங்கல்
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மஞ்சப்பை இயந்திரம் வழங்கல்
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மஞ்சப்பை இயந்திரம் வழங்கல்
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மஞ்சப்பை இயந்திரம் வழங்கல்
ADDED : ஜூன் 08, 2024 02:40 AM
ஈரோடு: உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, ஈரோட்டில் அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம் சார்பில், சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குனர்களான கிருஷ்ணமூர்த்தி, சின்னச்சாமி, தங்கவேலு தலைமை வகித்தனர். செயல் இயக்குனர் ராம்ஜி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிப்காட் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜோதிபிரகாஷ் பங்கேற்றனர்.
அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் பேசினர். தொடர்ந்து அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, 200 மரக்கன்று நடப்பட்டது. முன்னதாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுக்கும் வகையில் தானியங்கி முறையில் இயங்கும் மஞ்சப்பை இயந்திரம், அக்னி ஸ்டீல் நிறுவனத்தின் சார்பில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வழங்கப்பட்டது.