/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டூவீலர்-ஆட்டோ மோதல் நான்கு பேர் படுகாயம்டூவீலர்-ஆட்டோ மோதல் நான்கு பேர் படுகாயம்
டூவீலர்-ஆட்டோ மோதல் நான்கு பேர் படுகாயம்
டூவீலர்-ஆட்டோ மோதல் நான்கு பேர் படுகாயம்
டூவீலர்-ஆட்டோ மோதல் நான்கு பேர் படுகாயம்
ADDED : ஜூன் 08, 2024 02:23 AM
அரவக்குறிச்சி: சின்னதாராபுரத்தில், டூவீலரும், ஆட்டோவும் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
அரவக்குறிச்சி அருகே கருங்கல் புளியம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் குமார், 43. இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் சின்னதாராபுரம் சாலையில், ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று சென்று கொண்டிருந்தார். நேரு நகர் அருகே சென்ற போது, கஞ்சனம்பட்டியை சேர்ந்த தர்மராஜ், 31, என்பவர் டூவீலரில் ஆட்டோவை முந்தி சென்று, எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திரும்பியதால், ரமேஷ்குமார் ஆட்டோ, டூவீலரின் பின்னால் மோதியது.
விபத்தில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் குமார் மற்றும் பயணிகள் கருங்கல்புளியம்பட்டியை சேர்ந்த பூபதி, கணேசன், டூவீலர் ஓட்டி சென்ற தர்மராஜ் ஆகிய நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சின்னாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.