பைபாஸ் சாலையில் மேம்பாலம் கோரி மனு
பைபாஸ் சாலையில் மேம்பாலம் கோரி மனு
பைபாஸ் சாலையில் மேம்பாலம் கோரி மனு
ADDED : ஜூலை 30, 2024 03:21 AM
ஈரோடு: பெருந்துறை சீலம்பட்டி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் ஈஸ்வரன், பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது: பெருந்துறை-பெத்தாம்பாளையம் சாலை, சீலம்பட்டி பைபாஸ் பிரிவில் ஏராளமான விபத்து நடந்து வருகிறது. பல உயிர் சேதம், உடல் ஊனங்கள் ஏற்பட்டுள்ளன.
பெருந்துறையில் இருந்து கவுந்தப்பாடி வரை, 17 கி.மீ., துாரத்-துக்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெருந்துறை வந்து செல்வதும், சிப்காட் வேலைக்கு வருவதால் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பைபாஸ் சாலையை கடந்து செல்கின்றன. இதனால் விபத்து தவிர்க்க முடியாததாகிவிட்டது. இங்கு விபத்தை தடுக்க, மேம்பாலம் அமைப்பது மட்டுமே சிறந்த வழியாகும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இவ்விடத்தில் மேம்பாலம் அமைப்பதற்-கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.