ADDED : ஜூலை 30, 2024 03:21 AM
ஈரோடு: ஈரோடு, மரப்பாலம், கம்பர் வீதியை சேர்ந்தவர் மகேந்திரன், 46; மஞ்சள் காமாலை நோய் இருந்தது. வேலை இல்லை. திருமண-மாகவில்லை. இரண்டு நாட்களாக விரக்தியில் இருந்தார்.
இந்நிலையில் ஈரோடு - காவிரி இடையேயான ரயில் தண்டவா-ளத்தில் நேற்று முன்தினம் தலை வைத்து படுத்தார். ரயில் ஏறி இறங்கியதில் பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.