ADDED : ஜூலை 22, 2024 12:04 PM
ஈரோடு: அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க ஆறாவது கோட்ட மாநாடு நேற்று ஈரோட்டில் நடந்தது. கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோட்ட சங்க புரவலர் நல்லதம்பி முன்னிலை வகித்தார்.கோட்ட செயலாளர் ராமசாமி ஈராண்டறிக்கையை வாசித்தார்.
சேலம் மாவட்ட தலைவர் கணேசன், ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் மணிபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அகில இந்திய அஞ்சல் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ராகவேந்திரன் சிறப்புரையாற்றினார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். முடக்கப்பட்ட, 18 மாத அகவிலைபடியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.