/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூலை 22, 2024 12:04 PM
கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது.
இதனால் குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிகின்றனர். நேற்று வார விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வினாடிக்கு, 800 கன அடி வெளியேறிய தண்ணீரில் ஆனந்தமாக குளித்தனர். அங்குள்ள சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்து, அவரவர் சொந்த ஊர் திரும்பினர்.