/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2024 12:00 PM
ஈரோடு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் வீரப்பன்சத்திரத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மண்டல செயலாளர் நவநீதன் தலைமை வகித்தார். மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி, சத்யா, மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைபொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை, ஜாதி மோதல், வன்முறை தாக்குதல், ரவுடிகளின் அட்டூழியம், கூலிப்படை கலாச்சாரத்தை அரசு காக்கத் தவறியதாக குற்றம் சாட்டி கோஷமிட்டனர். தி.மு.க., ஆட்சியில் 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி, அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்பு உள்ளாக்கி இருப்பதாக கண்டனம் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காக்க வேண்டும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.