Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ADDED : ஆக 02, 2024 03:58 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில், 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன.

ஈரோடு மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் டாக்டர் மணீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மொடக்

குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சிக்கு சொந்த-மான இடத்தில், முதல்வரின் சிறு விளையாட்டரங்கம் அமைப்ப-தற்கு ஏதுவான இடமாக இருப்பதால் அதனை அமைக்கவும், அந்த இடம் மாநகராட்சி பெயரிலேயே இருக்கும். இதற்காக கலெக்டர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆகியோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான்கு மண்டலங்களில் உள்ள, 60 வார்டுகளில் அரசால் செயல்ப-டுத்தப்படும் திட்டங்கள், ஆய்வு கூட்டங்கள், மாநகராட்சி அறி-விப்புகள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, மக்களிடம் இருந்து சமூக ஊடகம் மற்றும் வலைத-ளங்கள் மூலம் வரப்பெறும் குறைகளை தொடர்ந்து கண்கா-ணித்து பணிகள் மேற்கொள்வது என்பன உள்பட, 68 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பேசிய விபரம்: மரப்பாலம் நால்ரோடு ஆயுர்வேத மருத்துவமனைக்கு தொடர்ந்து மருந்து வழங்க வேண்டும். அதேபோல், அங்குள்ள ஆடுவதை கூடம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். கனி-மார்க்கெட் வணிக வளாக கட்டடத்தின் சுற்றுப்புற பகுதியில், போதுமான அளவு மின் விளக்குகள் பொருத்த வேண்டும். 10வது வார்டில் அங்கீகரிக்கப்படாத இடங்களில், கழிவு நீர் சாக்க-டைகள் இல்லாததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்-ளது. சாக்கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி விதிக்கப்படாத கட்டடங்களுக்கு விரைவாக வரி விதிக்க வேண்டும். அம்மா உணவக ஊழியர்களுக்கு, ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அம்மா உணவக வளாகத்தில், முதல்வர் ஸ்டாலின் பெயர் அடங்கிய கல்வெட்டு வைக்க வேண்டும். ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டிற்கு கலைஞர் நூற்-றாண்டு நுழைவு என பெயரிட்டு ஆர்ச் அமைக்க வேண்டும்.

இவ்வாறு பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us