/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின் கம்பிகளை உரசிய 10,113 மரக்கிளைகள் அகற்றம் மின் கம்பிகளை உரசிய 10,113 மரக்கிளைகள் அகற்றம்
மின் கம்பிகளை உரசிய 10,113 மரக்கிளைகள் அகற்றம்
மின் கம்பிகளை உரசிய 10,113 மரக்கிளைகள் அகற்றம்
மின் கம்பிகளை உரசிய 10,113 மரக்கிளைகள் அகற்றம்
ADDED : ஆக 02, 2024 03:57 AM
ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், கடந்த ஜூலை மாதம் மேற்-கொண்ட பராமரிப்பு பணியில், மின் கம்பிகளை உரசியபடி சென்ற, 10,113 மரக்கிளைகள் அகற்றப்பட்டன.
ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலை-செல்வி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில், கடந்த, 1 முதல், 28 வரை ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட, எட்டு துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணிகள் நடந்தன. உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பி-களில் உரசிய, 10,113 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. 137 பழுதடைந்த மின்
கம்பங்கள், 133 சாய்ந்த நிலை மின் கம்பங்கள் சரி செய்யப்பட்-டன.
தாழ்வாக சென்ற மின் கம்பிகளுக்கு நடுவே புதிதாக, 93 மின் கம்-பங்கள் நடப்பட்டன. 326 பழுதடைந்த இழுவை கம்பி சரி செய்-யப்பட்டு, 806 பழுதடைந்த பீங்கான்கள் மாற்றப்பட்டுள்ளன. 1,037 இடங்களில் பழுதடைந்த ஜம்பர் ஒயர் மாற்றம் செய்யப்-பட்டு, 365 மின் மாற்றிகளில் உள்ள காற்று இடைவெளி திறப்பான் சரி செய்யப்பட்டன.
மேலும், 236 மின் மாற்றிகளில் எண்ணெய் அளவு சரி செய்யப்-பட்டு, 317 பகுதிகளில் தாழ்வாக சென்ற மின் கம்பிகள் சரி செய்யும் பணி நடந்தது. 25 இடங்களில் வெளியில் தெரிந்த புதைவட கேபிள் சரி செய்யப்பட்டது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.