/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திடீரென எரிந்த ஆம்னி பஸ்; 15 பயணியர் தப்பினர் திடீரென எரிந்த ஆம்னி பஸ்; 15 பயணியர் தப்பினர்
திடீரென எரிந்த ஆம்னி பஸ்; 15 பயணியர் தப்பினர்
திடீரென எரிந்த ஆம்னி பஸ்; 15 பயணியர் தப்பினர்
திடீரென எரிந்த ஆம்னி பஸ்; 15 பயணியர் தப்பினர்
ADDED : ஜூலை 19, 2024 07:07 AM

பவானி: சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ் நேற்று அதிகாலை புறப்பட்டது. சென்னையை சேர்ந்த கார்த்திக், 43, ஓட்டினார். ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகில், சத்தி ரோடு பாலம் அருகே நேற்று அதிகாலை 4:40 மணிக்கு வந்தபோது, இன்ஜின் பகுதியில் புகை வந்தது. இதனால் டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி, பஸ்சில் இருந்த, 15 பயணியரையும் உடமைகளுடன் வெளியேற அறிவுறுத்தினார். அப்போது பஸ் திடீரென எரிய துவங்கியது.
தகவலறிந்த பவானி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், 80 சதவீத பஸ் எரிந்து நாசமானது. சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.