/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நபிகள் பற்றி தவறான பதிவு; நடவடிக்கை கோரி மனு நபிகள் பற்றி தவறான பதிவு; நடவடிக்கை கோரி மனு
நபிகள் பற்றி தவறான பதிவு; நடவடிக்கை கோரி மனு
நபிகள் பற்றி தவறான பதிவு; நடவடிக்கை கோரி மனு
நபிகள் பற்றி தவறான பதிவு; நடவடிக்கை கோரி மனு
ADDED : ஜூலை 20, 2024 02:29 AM
ஈரோடு;தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக, ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பில், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:அனைத்து சமய மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழும் நிலையில், சில ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக பிளவுபடுத்தும் பணி செய்கின்றனர்.
நபிகள் நாயகம் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து, பேஸ்புக்கில் தவறாக சித்தரித்து, 'பா.ஜ., தகவல் தொழில் நுட்ப பிரிவு அன்புடன் அன்பு வேல்' என்பவர் வெளியிடுகிறார்.தவிர குன்னத்துார் பகுதியை சேர்ந்த 'குன்னத்துார் முதல்வர்' எனும் முகநுாலில் பா.ஜ., ஊடகத்துறை செயலர் நந்தகுமாரும் தவறான பதிவை வெளியிடுகிறார்.பதற்றத்தை ஏற்படுத்தும் இந்நபர்களை கைது செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.