ADDED : ஜூலை 20, 2024 02:29 AM
டி.என்.பாளையம்;டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையத்தில், தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடக்கிறது.
ஷட்டர்களை பயன்படுத்தி கான்கிரீட் போட்டு பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோவில் வந்து நான்கு பேர் ஷட்டர்களை திருடியுள்ளனர்.பங்களாபுதுார் போலீசார் விசாரணையில் கொண்டையம்பாளையம் மனோகரன், 44, தியாகராஜன், 38; சலங்கபாளையம் ஸ்ரீனிவாசன், 53; நஞ்சை துறையம்பாளையம் உதயகுமார், 50, என்பது தெரிந்தது. அவர்கள் திருடிய, 11 ஷட்டர், திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். நான்கு பேரையும் கைது செய்து, கோபி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.