Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'பெயரளவுக்கு கூட்டம் நடந்தால் எப்படி?' குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., கவலை

'பெயரளவுக்கு கூட்டம் நடந்தால் எப்படி?' குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., கவலை

'பெயரளவுக்கு கூட்டம் நடந்தால் எப்படி?' குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., கவலை

'பெயரளவுக்கு கூட்டம் நடந்தால் எப்படி?' குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., கவலை

ADDED : ஜூலை 20, 2024 07:07 AM


Google News
ஈரோடு : ஈரோடு கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., (பொறுப்பு) மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் தலைமையில் நடந்தது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அமுதா முன்னிலை வகித்தார்.

கூட்ட விவாதம் வருமாறு:

சமூக ஆர்வலர் முகிலன்: கடந்த கூட்டத்தில், 12 துறை சார்ந்த, 40 மனு வழங்கினேன். ஒரு மனுவுக்கு கூட பதில் தரவில்லை. பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அலு-வலகத்தில் ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி கலந்தாய்வு கூட்-டத்தை முறையாக நடத்த வேண்டும். கடந்த கூட்டத்தில் அங்கு நடந்த பிரச்னை தொடர்பாக, 42 பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம்: காளிங்க-ராயன் வாய்க்காலை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு-களை அகற்ற வேண்டும். ஈரோடு பகுதியில் உள்ள பேபி வாய்க்-காலை முழுமையாக துார்வாரி, கழிவு நீர், காளிங்கராயன் வாய்க்-காலில் கலப்பதை தடுக்க வேண்டும். வாய்க்காலை ஒட்டி அமைந்துள்ள சாய, சலவை, தோல் ஆலைகளை, 5 கி.மீ.,க்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும்.

மாநகர் மாவட்ட அ.தி.மு.க., விவசாய பிரிவு செயலாளர் தங்-கவேல்: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா பகுதியில், நில அளவீடு செய்து, கீழ்பவானி பாசனப்பகுதி நிலங்கள், வீட்டு-மனை, பாதை, ஓடை நில ஆக்கிரமிப்புகளை பிரித்து, ஆக்கிர-மிப்பை அகற்ற வேண்டும். அனைத்து பகுதிகுளம், குட்டைக-ளை அளவீடு செய்து, வேலி அமைக்க வேண்டும்.

ஆர்.டி.ஓ., (பொறுப்பு) ராம்குமார்: இக்கூட்டங்களில் பெறப்-படும் மனுக்களுக்கு, அடுத்த கூட்டம் நடக்கும் முன், 15ம் தேதிக்குள் மனுதாரருக்கு உரிய பதில் தாருங்கள். இக்கூட்டத்-துக்கு பொதுப்பணி, நீர் வளத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், அறநிலையத்துறை, நெடுஞ்சாலை துறை என பல துறையினர் வரவில்லை. மனு தொடர்பாக பேசவும், தீர்வு காணவும் முடியவில்லை. வரும் கூட்-டங்களில் அனைத்து துறையினரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பெயரளவில் நடக்காமல், அதிக மனுக்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us