/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின்மாற்றியில் படரும் -கொடி அகற்ற மக்கள் வலியுறுத்தல் மின்மாற்றியில் படரும் -கொடி அகற்ற மக்கள் வலியுறுத்தல்
மின்மாற்றியில் படரும் -கொடி அகற்ற மக்கள் வலியுறுத்தல்
மின்மாற்றியில் படரும் -கொடி அகற்ற மக்கள் வலியுறுத்தல்
மின்மாற்றியில் படரும் -கொடி அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 19, 2024 02:19 AM
கரூர்: மின்மாற்றியில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர், தான்தோன்றிமலை மெயின் ரோடு சிவசக்தி நகரில், மின்-மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள பகுதியில், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகி-றது. பச்சை செடிகள் இந்த மின்மாற்றியில் படர்ந்து, மின் கம்பி-களை உரசும் நிலையில் உள்ளது. இதனால் அந்த செடி, கொடிகள் வழியாக மின்சாரம் பாய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளது. மேலும் செடி, கொடிகளால் மின்மாற்றியில் பழுது ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மின்மாற்றியில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.