ADDED : ஜூன் 16, 2024 06:22 AM
ஈரோடு : ஈரோடு
மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சி.எஸ்.நகர் முதல், கொங்கம்பாளையம்
வரை சிறு, குறு வணிகர்களை இணைத்து, மாமரத்துப்பாளையம் அனைத்து
வணிகர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் துவங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட
தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மாதேஸ்வரன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் முன்னிலை வகித்தனர். மாநகர
தலைவர் அந்தோணி யூஜின், மாவட்ட இளைஞரணி பொருளாளர் சேகர் ஆகியோர்
பேசினர். புதிய சங்க தலைவராக
கண்ணுசாமி, செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் தங்கராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.