/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு
அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு
அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு
அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு
ADDED : ஜூன் 16, 2024 06:23 AM
ஈரோடு : ஈரோடு,
எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஈரோடு ரவுண்ட்
டேபிள் 98, லேடி சர்க்கிள் 78 சார்பாக, ரூ.25 லட்சம் மதிப்பில் மூன்று
புதிய வகுப்பறைகள், தனியார் நிறுவனம் சார்பில், ரூ.3 லட்சம் மதிப்பில்
நுாலகமும் கட்டப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
ஈரோடு ரவுண்ட் டேபிள் 98 சேர்மன் விக்ரம் தலைமை வகித்தார். மேயர்
நாகரத்தினம், ரிப்பன் வெட்டி புதிய வகுப்பறைகளை துவக்கி வைத்தார்.
துணை மேயர் செல்வராஜ், மாநகர செயலர் சுப்பிரமணியன், கவுன்சிலர்
ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி
வரவேற்றார். ரவுண்ட் டேபிள் 98, லேடீஸ் சர்க்கிள் 78 உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்.