ADDED : ஜூலை 30, 2024 03:21 AM
ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல்குமார்.
காய்கறி வியாபாரி. இவரின், 17 வயது மகளுக்கு, சென்னையில் பிரபல கல்லுாரியில் சேர இடம் கிடைத்தது. போதிய பண வசதி இல்லாததால் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லுாரியில் சேருமாறு விமல்குமார் கூறியுள்ளார். இதை மகள் ஒப்புக்கொள்ளாத நிலையில், வீட்டில் இருந்து மாய-மாகி விட்டார். ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளார். அதில் 'ஐ ஆம் சாரி அப்பா... மிஸ் யூ' என குறிப்பிட்டுள்ளார். விமல்குமார் புகாரின்படி, தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.