மருத்துவ செலவு தொகை மீளப்பெற யோசனை
மருத்துவ செலவு தொகை மீளப்பெற யோசனை
மருத்துவ செலவு தொகை மீளப்பெற யோசனை
ADDED : ஜூலை 30, 2024 03:21 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட அலகில் பணிபுரியும் அரசு பணியாளர், ஓய்வு பெற்றோர், குடும்ப ஓய்வூதியர் கடந்த, 2023 ஜூலை, 1 முதல் கடந்த, 2024 ஜூன், 30 வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவ செலவின தொகையை மீளப்பெறலாம்.
இதற்கான விண்ணப்பங்களுடன் கூடிய பட்டியல் சம்மந்தப்பட்ட அலுவ-லகம் மூலம் சமர்ப்பித்து, சென்னை யுனைடெட் இந்திய இன்-சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஆக.,16க்குள் சேர வேண்டும். எனவே கடந்த ஜூன், 30க்கு முன் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை முடித்தோர், சிகிச்சை முடித்த, 45 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அலுவலகம் மூலம் மருத்துவ செலவின தொகையை மீளப்பெறு-வதற்கான விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். குறித்த நாட்க-ளுக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.