Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ADDED : ஜூன் 11, 2024 06:04 AM


Google News
ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ--மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறைக்கு பின் நேற்று அரசு, நிதியுதவி, தனியார், மாநகராட்சி, நகராட்சி, நலப்பள்ளிகள், சிறப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளை வரவேற்கும் வகையில் வண்ண பலுான்களால் அலங்கார வளைவு, தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மாணவிகளை பூ துாவி ஆசிரியைகள் வரவேற்றனர். பள்ளி வளாகத்தில் மாணவிகளுடன் பெற்றோர் செல்பி எடுக்க வசதியாக, பூக்களால் வடிவமைக்கப்பட்ட செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டன. தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஆசிரியைகள், மாணவியரை வரவேற்றனர்.

ஈரோடு எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவ, மாணவியருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க, ஆரத்தி எடுத்து திலகமிட்டு வரவேற்பு தரப்பட்டது. பூங்கொத்து, இனிப்பு வழங்கி ஆசிரியைகள் வரவேற்றனர். புதிதாக சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோருடனான அறிமுக கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியை சுமதி தலைமை வகித்தார்.* ஈரோடு, திருநகர் காலனி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, -மாணவியரை, தலைமையாசிரியை அருணாதேவி தலைமையிலான ஆசிரியர்கள், சாக்லேட், பிஸ்கட், ரோஜா பூ, சர்க்கரை பொங்கல் கொடுத்து வரவேற்றனர்.

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ,மாணவிகளுக்கு பாட புத்தகம், நோட்டுகள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஜூன், 3ல் வழங்க வேண்டிய இனிப்பு பொங்கல் நேற்று மதியம் உணவுடன் வழங்கப்பட்டது. ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பாட புத்தகங்கள், நோட்டுகளை வழங்கினார்.கோபியில்...

கோபி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) கண்காணிப்பில், ஏழு யூனியன்களில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் என, 545 பள்ளிகள் இயங்குகின்றன.

கோபி யூனியனில், 71 துவக்கப்பள்ளி, 20 நடுநிலைப்பள்ளி என, 91 பள்ளி இயங்குகிறது. இப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பி நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டி.இ.ஓ., திருநாவுக்கரசு ஆய்வு செய்தார்.

ஆரத்தி எடுத்து உற்சாகம்

நம்பியூர் அருகே பட்டிமணிக்காரன்பாளையம் பகுதி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், புதியதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் விதமாக, நாதஸ்வரம், மேளதாளம் இசைத்தும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பள்ளியில் பயிலும், 700 மாணவர்களுக்கும் மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

-நிருபர் குழு-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us