/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆடிட்டர் வீட்டில் 'அடேங்கப்பா' திருட்டு 'சிசிடிவி' கேமராவில் 'சிக்கிய' ஒற்றை ஆசாமி ஆடிட்டர் வீட்டில் 'அடேங்கப்பா' திருட்டு 'சிசிடிவி' கேமராவில் 'சிக்கிய' ஒற்றை ஆசாமி
ஆடிட்டர் வீட்டில் 'அடேங்கப்பா' திருட்டு 'சிசிடிவி' கேமராவில் 'சிக்கிய' ஒற்றை ஆசாமி
ஆடிட்டர் வீட்டில் 'அடேங்கப்பா' திருட்டு 'சிசிடிவி' கேமராவில் 'சிக்கிய' ஒற்றை ஆசாமி
ஆடிட்டர் வீட்டில் 'அடேங்கப்பா' திருட்டு 'சிசிடிவி' கேமராவில் 'சிக்கிய' ஒற்றை ஆசாமி
ADDED : ஜூன் 11, 2024 06:05 AM
ஈரோடு : ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ.காலனி ஏழாவது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69, ஆடிட்டர். தேனியில் நடக்கும் உறவினர் இல்ல திருமணத்துக்கு, மனைவியுடன் கடந்த, 8ம் தேதி காலை சென்று விட்டனர். 9ம் தேதி காலை வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதாக, வீட்டு உரிமையாளர் சந்திரன், சுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தார். சூரம்பட்டி போலீசார் ஆய்வில், 235 பவுன் தங்க நகை, 48 லட்சம் ரூபாய் திருட்டு போனது உறுதி
செய்யப்பட்டது.
டவுன் டி.எஸ்.பி., ஜெய்சிங், மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில்லாமல் சப்-டிவிசன் க்ரைம் போலீசாரும் விசாரிக்கின்றனர். ஆடிட்டர் வீட்டில் வேலை பார்ப்பவர்கள், வீட்டிற்கு வந்து செல்பவர்கள், வீட்டு உரிமையாளர் சந்திரன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வோர், கடந்த 8ல் அப்பகுதிக்கு புதிதாக வந்து சென்ற சந்தேக நபர்கள் குறித்து விசாரிக்கப்படுகிறது.
போலீசாரிடம் சிக்கிய 'சிசிடிவி' கேமரா பதிவில், சுப்பிரமணி வீட்டுக்குள் ஒருவர் மட்டும் வந்து செல்வது பதிவாகி உள்ளது. ஒரு நபர் வீட்டுக்குள் சென்று, 235 பவுன் நகை, 48 லட்சம் ரூபாயை திருடி செல்வது சாத்தியமா? என்ற சந்தேகத்தால், அப்பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை முழுமையாக ஆராய, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.v