Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு சில செய்திகள்

ஈரோடு சில செய்திகள்

ஈரோடு சில செய்திகள்

ஈரோடு சில செய்திகள்

ADDED : ஜூன் 10, 2024 02:04 AM


Google News
சென்னிமலை கோவிலில்

11 ஜோடிகளுக்கு திருமணம்

சென்னிமலை: சென்னிமலையில் மலை மீது அமைந்துள்ள, சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுப முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் திருமணம் நடப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சுப முகூர்த்த தினமான நேற்று, 11 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அதிகாலை முதலே உறவினர்கள் கூட்டம் கோவிலுக்கு வரத் தொடங்கியது. 11 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியபடி இருந்தது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியர், முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். வரும், ௧௨ம் தேதி, ௨௨ ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு செய்துள்ளதாக, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் அன்றைய தினம் மலை கோவிலுக்கு கார்களை அனுமதிப்பதில் கோவில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

மரங்களுக்கு திருமணம்

ஈரோடு, ஜூன் 10-

ஈரோடு, கைகாட்டி வலசு, வித்யா நகரில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் அருகே அரச மரம் மற்றும் வேப்ப மரம் வளர்ந்திருந்தது. அரச மரத்தை 'சிவன்' எனவும், வேப்ப மரத்தை 'பார்வதி' எனவும் கருதி, திருமணம் செய்து வைக்க, பக்தர்கள் முடிவு செய்தனர். திருமண பத்திரிகை அச்சிட்டு நேற்று காலை, அரச மரத்துக்கு பட்டு வேட்டி, வேப்ப மரத்துக்கு பட்டு சேலை மற்றும் ஆபரணங்கள் அணிவித்து, வேத மந்திரம் முழங்க கல்யாணம் செய்து வைத்து வழிபட்டனர். இதில் அப்

பகுதி மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

உழவர் சந்தைகளுக்கு

68.35 டன் காய்கறி வரத்து

ஈரோடு, ஜூன் 10-

ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளில், 68.35 டன் காய்கறி, 25.31 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடி என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. முகூர்த்த நாள் மற்றும் பள்ளிகள் திறப்பு எதிரொலியால், நேற்று காய்கறி வரத்து அதிகரித்து காணப்பட்டது. சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 26.49 டன் காய்கறி, பழங்கள், 9.௬௫ லட்சம் ரூபாய்க்கு விற்றது. ஆறு உழவர் சந்தைகளுக்கும், 68.35 டன் காய்கறி வரத்தாகி, 25.௩௧ லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.

மனைவி மாயம்; கணவர் புகார்

ஈரோடு, ஜூன் 10-

சிவகிரி, தாண்டாம்பாளையம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் முத்துக்குமார், 34, எலக்ட்ரீசியன். இவர் மனைவி கவுசல்யா, 27; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். கோடை விடுமுறையால் இரு மாதமாக கவுசல்யா குழந்தைகளுடன், காங்கயத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்தார். கடந்த, 6ல் கவுசல்யா குழந்தைகளுடன் தாண்டாம்பாளையம் வந்தார். 7ம் தேதி கவுசல்யா மாயமாகி விட்டார். அவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. முத்துக்குமார் புகாரின்படி, சிவகிரி போலீசார் தேடி வருகின்றனர்.

தி.மு.க., இளைஞரணி

சார்பில் நல உதவிகள்

ஈரோடு-

முன்னாள் முதல்வர் கருணாநிதி, 101வது பிறந்ந நாளையொட்டி, ஈரோடு மாநகர தி.மு.க., இளைஞரணி சார்பில், முதியோர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது. இளைஞரணி துணை அமைப்பாளர் ஜாகீர் உசேன் தலைமையில், சோலாரில் அட்சயம் அறக்கட்டளை முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி, நல உதவி வழங்கினர். இதில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, மாநகர துணை செயலாளர் பாத்திமா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் சேந்தபுகழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us