ADDED : ஜூன் 17, 2024 01:16 AM
சத்தி: தாளவாடி அருகே மரூரை சேர்ந்தவர் ரங்கராஜ், இவரது மகள் மேகா, மைசூரிலுள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, கல்லுாரிக்கு செல்ல பிடிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த, 13ம் தேதி வீட்டிலிருந்தவரை காணவில்லை. காணாமல் போன மகளை மீட்டு தருமாறு, நேற்று முன்தினம் தாளவாடி போலீசில் புகாரளிக்கப் பட்டுள்ளது.