/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஏ.டி.எம். கார்டு மோசடி: போலீசில் சிக்கிய ஆசாமிஏ.டி.எம். கார்டு மோசடி: போலீசில் சிக்கிய ஆசாமி
ஏ.டி.எம். கார்டு மோசடி: போலீசில் சிக்கிய ஆசாமி
ஏ.டி.எம். கார்டு மோசடி: போலீசில் சிக்கிய ஆசாமி
ஏ.டி.எம். கார்டு மோசடி: போலீசில் சிக்கிய ஆசாமி
ADDED : ஜூன் 17, 2024 01:17 AM
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உடுமலை ரவுண்டானா அருகே உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் நேற்று முன்தினம், தளவாய்பட்டினத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன், ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க முயற்சி செய்த போது, பணம் வராததால் அருகே இருந்தவரை உதவும்படி கேட்டுள்ளார். அந்த ஆசாமியோ, ஏ.டி.எம். கார்டை பயன்படுத்துவது போல் பாசாங்கு செய்துவிட்டு, பணம் வரவில்லை என கூறி, சிறுவனிடம் வேறொரு ஏ.டி.எம். கார்டை, கொடுத்துவிட்டு மாயமானார்.
சிறிது நேரம் கழித்து அந்த கணக்கில் இருந்து, 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு இருப்பதை எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்து, சிறுவன் அதிர்ச்சி அடைந்தான். இது தொடர்பாக தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார், மோசடி செய்த ஆசாமியை, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடினர்.
அப்போது, தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் சிக்கிய ஆசாமியை பிடித்து, சிசிடிவி காட்சிகளில் தென்பட்ட உருவத்துடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அவர்தான் மோசடி செய்தது என்பது உறுதியானது.
இதையடுத்து நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் புகையிலைபட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம், 34, என்பது தெரிந்தது. இதையடுத்து, அவரை தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.