/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு துவக்கம்கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு துவக்கம்
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு துவக்கம்
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு துவக்கம்
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 17, 2024 01:16 AM
ஈரோடு: ஈரோடு, நஞ்சனாபுரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் வாசுதேவன் தலைமை வகித்தார். ஜே.கே. ஷா வகுப்புகள் மற்றும் வெராண்டா லேர்னிங் சொல்யுஷன்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் சிவக்குமார், பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.
பேராசிரியர் விஷ்ணுவர்தன், தொழில்முறை பாடத்தேர்வுகளில் வெற்றி கொள்ள கையாளப்படும் நேர்த்தியான முறைகள் குறித்தும், தலைமை கல்வியாளர் கேதன் ஷா தணிக்கையாளர்கள் மற்றும் கணக்காளர்கள் அரங்கில் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்காக தற்போது மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முயற்சிகள் மற்றும் ஒழுக்கம் குறித்து பேசினர்.
நிறுமச்செயலியல் மற்றும் தொழில்சார் கணக்கு பதிவியல் துறைத்தலைவர் அழகு அப்பன், வணிகவியல், வங்கி மற்றும் காப்பீட்டுத்துறை தலைவர் குமரகுரு, வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் மங்கையர்க்கரசி, இணை பேராசிரியர் சதீஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.