/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.௩ கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சி; பெண் புகார் ரூ.௩ கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சி; பெண் புகார்
ரூ.௩ கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சி; பெண் புகார்
ரூ.௩ கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சி; பெண் புகார்
ரூ.௩ கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சி; பெண் புகார்
ADDED : ஜூன் 14, 2024 12:49 AM
ஈரோடு, ஈரோடு, வில்லரசம்பட்டி, ஒண்டிக்காரன்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி ராஜேஸ்வரி. ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
ஓண்டிக்காரன்பாளையத்தில் வசிக்கிறேன். எனது கணவர் ராமசாமி கடந்த பிப்., 25ல் இறந்து விட்டார். அவர் உயிரோடு இருந்தபோது, 3 கோடி ரூபாய் மதிப்பிலான அவர் பெயரில் இருந்த சொத்தை, என் பெயருக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்திருந்தார். இந்நிலையில் ஈரோடு டவுனை சேர்ந்த ஒருவரிடம், இரண்டு லட்சம் ரூபாய் கடனாக வாங்கிதற்கு, இந்நிலத்தை அந்நபரின் மனைவி பெயரில், நான் எழுதி கொடுத்ததாக, மோசடியாக பத்திரம் தயாரித்து அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து, போலி கிரய அக்ரிமென்ட் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.