/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் மக்களை தவிக்கவிட்டு மக்கள் பணி புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் மக்களை தவிக்கவிட்டு மக்கள் பணி
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் மக்களை தவிக்கவிட்டு மக்கள் பணி
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் மக்களை தவிக்கவிட்டு மக்கள் பணி
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் மக்களை தவிக்கவிட்டு மக்கள் பணி
ADDED : ஜூன் 14, 2024 12:50 AM
புன்செய்புளியம்பட்டி புன்செய்புளியம்பட்டி நகராட்சி 13 மற்றும் 14வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் ஓடை செல்கிறது. ஓடையை ஒட்டி அம்மன் நகர், சருகு மாரியம்மன் கோவில் வீதி, தோட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
நகராட்சி சார்பில் மழை நீர் ஓடையின் குறுக்கே, கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில் கழிவு நீர் குழாய் பதிப்பதற்காக, அங்குள்ள விநாயகர் கோவில் அருகே உள்ள தரைப்பாலம் நேற்று முன்தினம் இரவு இடிக்கப்பட்டது. இதனால் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவே, அங்கு சென்ற அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: இங்குள்ள வீடுகளுக்கு செல்ல இந்த சாலையை தான் பயன்படுத்துகிறோம். முன்னறிவிப்பு, மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி தரைப்பாலத்தை இடித்ததால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் நாங்கள் பாதிப்புக்கு ஆளாகிறோம். பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல வேன் உட்பட அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. இவ்வாறு கூறினர்.
இரண்டொரு நாட்களில் கழிவுநீர் குழாய்கள் அமைத்து, தற்காலிக பாதை அமைத்து தருவதாக நகராட்சி அதிகாரிகள் உறுதி கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.