/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத்: ஈரோடு வழக்குகளுக்கு இன்று முன் அமர்வு சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத்: ஈரோடு வழக்குகளுக்கு இன்று முன் அமர்வு
சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத்: ஈரோடு வழக்குகளுக்கு இன்று முன் அமர்வு
சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத்: ஈரோடு வழக்குகளுக்கு இன்று முன் அமர்வு
சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத்: ஈரோடு வழக்குகளுக்கு இன்று முன் அமர்வு
ADDED : ஜூன் 13, 2024 05:32 PM
ஈரோடு:உச்சநீதிமன்றத்தில் நடக்கும் சிறப்பு லோக் அதாலத்துக்காக, ஈரோடு மாவட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு காண சிறப்பு முன் அமர்வு இன்று துவங்குகிறது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை:
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (ஸ்பெஷல் லோக் அதாலத்) வரும் ஜூலை, 29 முதல் ஆக., 3 வரை உச்சநீதிமன்றத்தில் நடக்க உள்ளது.
இதில் விசாரணைக்கு எடுத்து கொள்ளக்கூடிய, அடைாளம் காணப்பட்ட ஈரோடு மாவட்டம் சார்ந்த வழக்குகளின் விபரம், ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சிறப்பு முன் அமர்வு, இன்று முதல் நடக்க உள்ளது.
இதில் வழக்காடிகள் நேரில் அல்லது காணொலி வாயிலாக, வழக்குகளுக்கு தீர்வு காணலாம். இங்கு முடித்து கொள்ளப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திரும்ப பெற வாய்ப்புள்ளது. இது தொடர்பான சந்தேகம் அல்லது விபரங்களுக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நேரில் அல்லது disaerode1@gmail.com என்ற இ - மெயில் முகவரி அல்லது, 0424 - 2214282 என்ற எண்ணில் அறியலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.