/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஸ்டூடியோவில் புகுந்து மர்ம நபர் கைவரிசை ஸ்டூடியோவில் புகுந்து மர்ம நபர் கைவரிசை
ஸ்டூடியோவில் புகுந்து மர்ம நபர் கைவரிசை
ஸ்டூடியோவில் புகுந்து மர்ம நபர் கைவரிசை
ஸ்டூடியோவில் புகுந்து மர்ம நபர் கைவரிசை
ADDED : ஜூலை 11, 2024 12:00 AM
கோபி:போட்டோ ஸ்டூடியோவில் புகுந்து, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை, குல்லா அணிந்த மர்ம நபர் ஒருவர் களவாடி சென்றது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பகவதிராஜா, 40. இவர் கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு திறந்த நிலையில் இருந்தது.
கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரின்டர் மற்றும் ஹார்டு டிஸ்க் வரை களவு போயிருப்பது தெரியவந்தது. 'சிசிடிவி' கேமராவில் பதிவை பார்த்தபோது, குல்லா மற்றும் முகத்துக்கு மாஸ்க் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் நடமாடுவதும், பொருட்களை அள்ளி செல்வதும் தெரிந்தது.
பகவதிராஜா புகார்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.